சிறிலங்கா அதிபர் மாளிகையில் படுக்கை விரிப்பை திருடியவருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
Galle Face Protest
Sri Lankan Peoples
Sri Lanka Magistrate Court
By Sumithiran
அதிபர் மாளிகையில் படுக்கை விரிப்பு திருட்டு
அண்மையில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது கோட்டையிலுள்ள அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் படுக்கை விரிப்பு ஒன்றை திருடிய நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
சந்தேக நபரை 2022 செப்டம்பர் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை அண்மையில் தற்போதைய அதிபரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தில் வெளிநாட்டு மதுபான போத்தலொன்றை திருடினார் எனத் தெரிவித்து ஒருவரை காவல்துறையினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி