புலி சின்னத்துடன் மாவீரர் தினத்திற்கு சென்றவர் பிணையில் விடுதலை
மாவீரர் தினத்தில் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு புலிச் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய படம் பொறித்த ஆடையுடன் வந்த இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
சாவகச்சேரி நீதிமன்றில் இந்த வழக்கு இன்று(27) எடுக்கப்பட்ட போது குறித்த இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞரை பிணையில் விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஆட்சேபனை தெரிவிக்கப்படவில்லை.
பிணையில் விடுதலை
இந்நிலையில், இன்றைய தினம் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த இளைஞரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொடிகாமத்தைச் சேர்ந்த 24வயதான இளைஞன் ஒருவர் கடந்த மாவீரர் தினத்தன்று புலிச் சின்னம் மற்றும் பிரபாகரனின் படம் பொறித்த ஆடையுடன் தோன்றியமைக்காகப் நவம்பர் 28ம் திகதி கைதாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்