கொழும்பில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு!! ஒருவர் வைத்தியசாலையில்
Sri Lanka Police
Colombo
Colombo Hospital
Sri Lanka Police Investigation
By Kanna
கொழும்பு – புதுசெட்டித்தெருவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 29 வயதான ஒருவர் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர்
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோதே குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படாத அதேவேளை, மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
