தொடருந்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு..! யாழில் சம்பவம்
Jaffna
Train Crash
Death
By Kiruththikan
தொடருந்து
யாழ்ப்பாணம் அரியாலையில் தொடருந்துடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கல்வியங்காடு, புதிய செம்மணி வீதியைச் சேர்ந்த தனஞ்சயன் (வயது -78) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
அரியாலையில் வீதியில் வியாபார நோக்கமாக துவிச்சக்கரவண்டியில் சென்றபொழுது பாதுகாப்பற்ற தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றது.
கடவையை கடக்கும் போதே விபத்து
வயோதிபருக்கு ஏற்கனவே ஒரு கண் பார்வையில்லாமலும் காது கேட்காத நிலையிலும் கடவையை கடக்கும் போதே விபத்து ஏற்பட்டுள்ளது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது.

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்