கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : கொமாண்டோ சலிந்த மற்றும் கெஹெல்பத்தர பத்மே அதிரடியாக கைது
கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹெல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகிய இரண்டு குற்றவாளிகளும் இன்று (9) மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட கெஹல்பத்தர பத்மே என்ற மனுதினு பத்மசிறி பெரேரா, மலேசியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
பாதாள உலகக் குழு
இந்தக் கைதுகள் தொடர்பான தகவல்களை இலங்கை பொலிசார் ஏற்கனவே சர்வதேச பொலிஸாரிடம் அதிகாரப்பூர்வமாகக் கேட்டுள்ளனர்.
கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகக்குழுத் தலைவரான கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொலை செய்த சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதாக மன்தினு பத்மசிறி என்ற கெஹேல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகிய இரண்டு குற்றவாளிகளும் நேரடியாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.
கெஹேல்பத்தர பத்மே டுபாயில் இருந்தும், கமாண்டோ சலிந்த மலேசியாவில் இருந்தும் இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்படி, குறித்த இரண்டு குற்றவாளிகளுக்கும் சர்வதேச காவல்துறை ஊடாக காவல்துறை அதிகாரிகள் சிவப்பு அறிவித்தலை வெளியிட்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
