முல்லைத்தீவில் இளைஞர் கொடூர கொலை....! அம்பலப்படுத்தும் கஜேந்திரகுமார் எம்.பி
முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான இளைஞர் மரணம் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட கொலை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - (Mullaitivu) முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்கு வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடாத்தியதில் காணாமல் போன இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இனப்படுகொலை வெறி
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இராணுவம் தொடர்ந்தும் அதே இனப்படுகொலை வெறியில் இருக்கின்ற வரைக்கும், முல்லைத்தீவில் - வடக்கு கிழக்கில் இருக்கின்ற எந்தவொரு தமிழ் மக்களிற்கும் பாதுகாப்பு இருக்கப்போவதில்லை.
ஒரு இராணுவ சிப்பாய் இரண்டு பொதுமக்கள் என்ற அடிப்படையில் தான் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர்.
அங்கு கொலை நடந்தால் கூட இராணுவத்திற்கு தெரியாமல் நடக்க முடியாத நிலை தான் காணப்படுகின்றது.
இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட கொலை
இராணுவத்தினர் முழுமையாக பொறுப்புக்கூற வைக்கின்ற வரைக்கும், இராணுவத்தில் இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றம், போர்க்குற்றங்கள் போன்றவற்றில் ஈடுபட்ட முழுப்பேரும் அதிலிருந்து முழுமையாக அகற்றப்படும் வரையிலாவது அந்த இராணுவம் வடக்கு கிழக்கிலிருந்து அகற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைப்பதற்கு காரணம் எங்களிற்கு ஏதோ விசர் என்பதற்காக இல்லை. அவர்கள் அங்கிருக்க கூடாது , அந்த மக்களிற்கு அவர்கள் அங்கிருப்பதே ஒரு ஆபத்து.
எங்களிற்கு கிடைத்த தகவலின் படி இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட கொலை. அவ்வாறே எங்களிற்கு தகவல் கிடைத்துள்ளது.
அவர் இராணுவ முகாமிற்கு சென்ற பிறகுதான் அவரை கொலை செய்து குளத்தில் போட்டிருக்கின்றார்கள் என அங்கிருக்கக்கூடியவர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.
இராணுவம் தொடர்ந்தும் அதே இனப்படுகொலை வெறியில் இருக்கின்ற வரைக்கும்,முல்லைத்தீவில் - வடக்குகிழக்கில் இருக்கின்ற எந்தவொரு தமிழ் மக்களிற்கும் பாதுகாப்பு இருக்கப்போவதில்லை“ என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
