நல்லூர் கந்தசுவாமி கோயிலில் நடைபெற்ற மானம்பூ உற்சவம்
Sri Lankan Tamils
Jaffna
Nallur Kandaswamy Kovil
By Sathangani
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோயிலில் (Nallur Kandaswamy Devasthanam) மானம்பூ உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது
நவராத்திரியின் இறுதி நாளான இன்று (02) காலை இந்த உற்சவம் நடைபெற்றது.
இதன்போது, காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்று, குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வெளிவீதி உலா வந்ததுடன் மானம்பூ உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.
முருகப்பெருமானின் அருட்காட்சி
நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருட்காட்சியை கண்டு களித்தனர்.

இதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள ஆலயங்களில் விஜயதசமி நாளான இன்று மானம்பூ உற்சவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி