கடும் மழையால் வெள்ளத்தில் அள்ளுண்டு வலு போன மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதி

Sri Lankan Tamils Batticaloa Sonnalum Kuttram
By Independent Writer May 13, 2026 09:50 AM GMT
Report

மட்டக்களப்பு, மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியூடாகப் பாயும் கடும் மழை வெள்ளம் காரணமாக, அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் அரச உத்தியோகஸ்தர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகியுள்ளனர். ​

வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மண்டூர் கூமாவடிப் பாலம் தற்போது புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது.

இந்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வாகனப் போக்குவரத்திற்காகப் பாலத்திற்கு அருகாமையில் தற்காலிக வீதி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

பதவி நீக்க விவகாரம்! சி.வி.கே - சுமந்திரனுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பதவி நீக்க விவகாரம்! சி.வி.கே - சுமந்திரனுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பாலப் பணிகள்

​கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு வீதியை மூடிப் பாய்ந்ததுடன், தற்காலிகமாகப் போடப்பட்டிருந்த வீதியையும் முற்றாக உடைத்துச் சென்றுள்ளது.

கடும் மழையால் வெள்ளத்தில் அள்ளுண்டு வலு போன மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதி | Mandur Wellaveli Main Road Damaged

​வீதி உடைந்ததன் காரணமாக மண்டூர், வெல்லாவெளி மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களுக்கிடையிலான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. ​

வெல்லாவெளி மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லும் அரச உத்தியோகஸ்தர்கள் கடமைக்குச் செல்ல முடியாமல் வீதியோரத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ​

பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், அவசர மருத்துவத் தேவைகளுக்காகவும் நகரப் பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் முடங்கியுள்ளனர்.

விவசாய நிலங்களுக்கான போக்குவரத்துப் பாதிப்பால் விவசாயிகளும் பெரும் கவலையடைந்துள்ளனர். ​

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே பாலப் பணிகளை அதிகாரிகள் விரைந்து முடித்திருக்க வேண்டும் அல்லது வெள்ளத்தைத் தாங்கக்கூடிய வகையில் வலுவான தற்காலிக வீதியை அமைத்திருக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் கடும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

அம்பாறையில் ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்

அம்பாறையில் ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்

திட்டமிடல் குறைபாடு

அதிகாரிகளின் திட்டமிடல் குறைபாடே இந்த அவல நிலைக்குக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ​

கடும் மழையால் வெள்ளத்தில் அள்ளுண்டு வலு போன மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதி | Mandur Wellaveli Main Road Damaged

தற்போது வெல்லாவெளி போக்குவரத்து பொலிஸார் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ளம் வீதியை மூடிப் பாய்வதால், ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்தினை அவர்கள் முற்றாகத் தடை செய்துள்ளனர். ​

சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் "போர்க்கால அடிப்படையில்" நடவடிக்கை எடுத்து, உடைந்த வீதியை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் அல்லது பொதுமக்களின் அவசரத் தேவைகளுக்காகப் பாதுகாப்பான மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிலக்கரி இறக்குமதி ஊழல்...! விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த எதிர் தரப்பு

நிலக்கரி இறக்குமதி ஊழல்...! விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த எதிர் தரப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023