தமிழர் பகுதியில் 6 இலட்சத்திற்கு ஏலம் போயுள்ள மாம்பழம்
கிளிநொச்சி(Kilinochi) பளை கச்சார் வெளி தான்தோன்றி பிள்ளையார் கோவில் பூசைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் 6 இலட்சம் ஏலம்போயுள்ளது.
வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தின் பளைப்பகுதியில் கச்சார் வெளி தான்தோன்றி பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோட்சவ விஞ்ஞாபனம் 13.07.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது.
இந் நிலையில் 5ம் திருவிழாவான மாம்பழத்திருவிழா (17.07.2024) இன்று நடைபெற்றுள்ளது.
மாம்பழ ஏலம்
வசந்தமண்டப பூசைகள் நிறைவுபெற்றதும் விநாயகப்பெருமானின் பூசைக்கு வைக்கப்பட்ட மாம்பழங்கள் இரண்டு ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
பக்ததர்கள் ஏலம் விலைகூறி இறுதியாக 6 இலட்சம் வரை சென்றுள்ள நிலையில் கச்சார்வெளியினை சேர்ந்த அரியகுட்டி வள்ளிப்பிள்ளை பூலோகம் குடும்பத்தினர் அதனை ஆறு இலட்சம் ரூபாவிற்கு பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
@tamilwinnews கிளிநொச்சி பளைபகுதியில் 6 இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்! #Lankasri #Tamilwin #Srilanka #kilinochchi #Hindu ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |