யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கெதிராக உயர்நீதிமன்றை நாடியது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

jaffna manivannan high court
By Jaso Jul 03, 2021 04:04 PM GMT
Report

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் மயூரன் இருவரையும் அந்தப் பதவியிலிருந்து நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுன் தீர்மானத்துக்கு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடைக் கட்டளையை ஆட்சேபனைக்கு உள்படுத்தி உயர் நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸுன் முதலாவது மேன்முறையீட்டு அனுமதி விண்ணப்பங்களை யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்தது. அவை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கட்சியின் இறுதி சந்தர்ப்பமாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு அனுமதி விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குத் தேர்ந்து அனுப்பப்பட்ட வி.மணிவண்ணன், உள்ளிட்ட உறுப்பினர்கள் தமது பங்காளிக் கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்டதால் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குமாறு அந்தக் கட்சி, யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகரிடம் கேட்டுக்கொண்டது.

அதனடிப்படையில் வி.மணிவண்ணனின், மயூரன் உள்ளிட்டவர்கள் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவி வறிதாகியதாக யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகரால் அவருக்கு அறிவிக்கப்பட்டது. தனது உறுப்புரிமை நீக்கத்தை சவாலுக்குட்படுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சிறப்பு மனுவை தானே தாக்கல் செய்தார். ஏனைய சக உறுப்பினர்களுக்கும் அவர் தனித்தனியே மனுக்களைத் தாக்கல் செய்தார்.

மனுக்களின் பிரதிவாதிகளாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸுன் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகர் உள்ளிட்ட நான்கு தரப்பினரை மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர். தனது பதவி நீக்கத்தை சட்ட வலுவற்றதாக உத்தரவிடுமாறு கோரிய மனுதாரர், அதன் மீதான விசாரணை நிறைவடைந்து இறுதிக் கட்டளை வரும் வரை இடைக்காலத் தடைக் கட்டளையை வழங்குமாறும் கோரியிருந்தார்.

அதனை ஏற்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் ஆரம்பத்தில் கட்டாணை வழங்கி பிரதிவாதிகளின் ஆட்சேபனை விண்ணப்பத்தின் பின்னர் இடைக்காலக் கட்டளையை வழங்கியது. மாவட்ட நீதிமன்றம் வழங்கிய இடைக்காலக் கட்டளையை ஆட்சேபித்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீட்டு அனுமதி விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த விண்ணப்பங்கள் மேல் நீதிமன்ற நீதிபதிகள் பாலேந்திரன் சசி மகேந்திரன், தாவூத் லெப்பை அப்துல் மனாப் ஆகியோர் அடங்கிய யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற அமர்வின் முன் விவாதங்கள் இடம்பெற்றன. அமர்வு கடந்த மார்ச் 31ஆம் திகதி அதன் கட்டளையை வழங்கியது. சட்டத்தரணி வி. மணிவண்ணன், மயூரன் ஆகியோரை யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுன் தீர்மானத்துக்கு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடைக் கட்டளையை உறுதி செய்தது.

அத்துடன் அதனை எதிர்த்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டு அனுமதி விண்ணப்பங்களை யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையிலேயே அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமது சட்டத்தரணி ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு அனுமதி விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளது.

அதனடிப்படையில் உயர் நீதிமன்றினால் வழக்காளி - எதிர்மனுதாரர்களான சட்டத்தரணி வி.மணிவண்ணன், மயூரன் ஆகியோருக்கு அறிவித்தலை அனுப்பிவைத்துள்ளது 

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015