வைத்தியர் உட்பட 9 பேருக்கு தொற்று -மாங்குளம் வைத்தியசாலைக்கு பூட்டு

hospital closed mankulam
By Jaso May 04, 2021 12:02 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் வைத்தியசாலையில் கடந்த 30.04.2021 ஆம் திகதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து மாங்குளம் வைத்தியசாலையில் 30.04.2021 தொடக்கம் 03-05-2021 வரை வைத்தியசாலை செயற்பாடுகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது

இந்நிலையில் நேற்று 03-05-2021 வைத்தியசாலை ஊழியர்கள் மேலும் எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து மாங்குளம் வைத்தியசாலை செயற்பாடுகள் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது

இதேவேளை மாங்குளம் வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையம் திறக்கப்பட்டு தொற்றுக்குள்ளானவர்கள் இங்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் வைத்தியசாலையில் பணியாற்றும் முறுகண்டி பகுதியை சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு கடந்த 30.04.2021 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து மாங்குளம் வைத்தியசாலை ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனை முடிவுகளில் நேற்று (03) கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில் எட்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  வைத்திய சாலையின் வைத்தியர், மருந்தாளர், தாதியர்,மற்றும் சாரதி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு மாங்குளம் வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் கணவர் மல்லாவி வைத்தியசாலையில் பணிபுரியும் நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மல்லாவி வைத்தியசாலை ஊழியர்களிடமும் பி சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன இதேவேளை முத்துஐயன் கட்டு பகுதியில் மக்கள் நடமாடும் முக்கிய பகுதிகளில் 643 ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர் தொற்றுநீக்கி விசிறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை பொலிஸார் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026