மாங்குளத்தில் அதிகாலைவேளை நடந்த சம்பவம் -மோப்ப நாய்களுடன் தீவிர விசாரணையில் பொலிஸார்
police
investigation
mullaithivu
mankulam
roberry
By Sumithiran
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவில் உள்ள மாங்குளம் பாலமரத்தடி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் உடைத்து அம்மனின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள பாலமரத்தடி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று (15.08.21) அதிகாலை வேளை கதவினை உடைத்த கொள்ளையர்கள் அம்மனின் தங்க நகைகள் சுமார் 18 பவுணுக்கு மேல் கொள்ளையடித்து சென்றுள்ளதாக ஆலய நிர்வாகியினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் தடயவியல் பொலிசார் மோப்ப நாய்கள் சகிதம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்