நீதிமன்றத்தில் பெண்ணிடம் இலஞ்சம் பெற்ற சிறை அலுவலர்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Sri Lanka Police Mannar Sri Lanka Magistrate Court
By Shadhu Shanker Nov 06, 2024 10:04 PM GMT
Report

மன்னார் (Mannar) நீதிமன்றத்தில் வைத்து பெண் ஒருவரிடம் 1000 ரூபாய் லஞ்சம் பெற்ற சிறை அலுவலரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மன்னார் நீதிமன்றத்தில் வைத்து லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வவுனியா (Vavuniya) சிறைச்சாலை அலுவலர் ஒருவர் நேற்று முன் தினம்(5) மன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப் படுத்திய போது குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

திட்டமிட்டு காய் நகர்த்தும் சுமந்திரன்: கடுமையாக நிராகரிக்கும் தேசிய மக்கள் சக்தி

திட்டமிட்டு காய் நகர்த்தும் சுமந்திரன்: கடுமையாக நிராகரிக்கும் தேசிய மக்கள் சக்தி

விளக்கமறியலில் வைக்க உத்தரவு

இந்த விடயம் தொடர்பில் தெரிய வருகையில், கடந்த செவ்வாய்க்கிழமை(5) வவுனியா சிறைச்சாலை அலுவலர் மன்னார் நீதவான் நீதிமன்றில் கடமைக்காக வந்துள்ளார்.

நீதிமன்றத்தில் பெண்ணிடம் இலஞ்சம் பெற்ற சிறை அலுவலர்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Mannar Court Officer Arrested For Bribery

குறித்த சிறைச்சாலை அலுவலர் மன்னார் நீதிமன்ற தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவரை பார்வையிடுவதற்காக சென்ற பெண் ஒருவரிடம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நபரை பார்வையிடுவதற்காக 1000 ரூபாய் பணத்தை பலவந்தமாகப் பெற்றுக் கொண்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மன்னார் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில் மன்னார் காவல் நிலைய பொறுப்பதிகாரியிடம் குறித்த சிறைச்சாலை அலுவலர் பாதிக்கப்பட்ட பெண்ணினால் அடையாளம் காண்பிக்கப்பட்ட நிலையில் குறித்த சிறைச்சாலை அலுவலர் நீதவான் நீதிமன்றில் வைத்து கைது செய்து விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த சிறைச்சாலை அலுவலரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

உங்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கிறேன்! அமெரிக்க ஜனாதிபதிக்கு அநுர வாழ்த்து

உங்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கிறேன்! அமெரிக்க ஜனாதிபதிக்கு அநுர வாழ்த்து

இலங்கை போரினால் நன்மையடைந்த அரசியல் வாதிகள்: ஹரிணி காட்டம்

இலங்கை போரினால் நன்மையடைந்த அரசியல் வாதிகள்: ஹரிணி காட்டம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                            

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்