ஒன்பதாயிரம் ரூபா வரை விற்பனையாகும் கணையான் வகை மீன்கள்
அம்பாறை மாவட்டத்தில் கணையான் வகை மீன் இனங்கள் அதிகளவில் பிடிக்கப்படுவதுடன், மக்களும் இந்த மீன்களை கொள்வனவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அதிகளவான கணையான் மீன் இனங்கள் அம்பாறை மாவட்டத்தின் பிராந்திய ஆற்றோரங்களில் பிடிபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக கடலை நோக்கி ஓடும் நீரோடைகள் ஆறுகளில் இருந்து 3 வகையான கணையான் வகை மீன்கள் கரைவலைகள் கட்டுவலைகள் தூண்டில்கள் மூலம் பிடிக்கப்படுகின்றன.
பிடிபடும் பாரிய மீன்கள்
சுமார் 5 முதல் 25 கிலோ எடையுள்ள பாரிய கணையான் மீன் இனங்களே இவ்வாறு மீனவர்கள் பிடித்து வருகின்றனர்.
இவ்வகையான மீன்கள் ஆயிரம் ரூபா ஒன்பதாயிரம் ரூபா வரையில் விற்பனையாகி வருவதுடன் பொதுமக்களும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை நிந்தவூர் பாலமுனை அட்டாளைச்சேனை பகுதிகளில் இவ்வாறான மீன் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |