சீரற்ற காலநிலை காரணமாக விவசாயிகள் பாதிப்பு
Kilinochchi
Mannar
Sri Lanka
By Kalaimathy
மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் தொடர்சியாக மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்ற நிலையில் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழை காரணமாக அறுவடைக்கு தயாரான நிலையில் காணப்பட்ட நெற்செய்கைகள் சரிந்துள்ளதுடன் வயல் நிலங்களுக்குள் நீரும் அதிகளவு தேங்கியுள்ளது.
அதே நேரம் அறுவடையின் பின்னர் வீதிகளில் உலர விடப்பட்டிருந்த ஒரு தொகை நெல் முற்றுமுழுதாக மழையில் நனைதுள்ளமையும், அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
விவசாயிகள் பாதிப்பு

முன்னதாகவே பசளை, உரம், எரிபொருள் விலை என அனைத்தின் விலையேற்றத்தின் மத்தியிலும் விவசாய செய்கையை மேற்கொண்ட விவசாயிகளிடம் நெல் மிகவும் அடிமாட்டு விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டு வரும் நிலையில் சீரற்ற கால நிலை காரணமாக மன்னார் கிளிநொச்சி மாவட்ட ஏழை விவசாயிகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி