மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச் சூடு: ஓவியத்தை வெளியிட்டு காவல்துறை மௌனம்
மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் நேற்று (18) மன்னார் நடுக்குடா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இராணுவத்தில் பனியாற்றிய நபர் எனவும் முன்னுக்கு பின் முரணாக கருத்துக்களை தெரிவித்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கபட்ட போதிலும், இந்த விடயம் தொடர்பிலும் கைது தொடர்பிலும் மன்னார் காவல்துறையினர் உறுதிப்படுத்தாத நிலையே காணப்படுகின்றது.
சந்தேக நபர் தொடர்பான ஓவியம்
இதேவேளை, நேற்றைய தினம் கைது நடவடிக்கை இடம் பெற்ற போதிலும் அது தொடர்பில் எந்தவொரு ஊடக வெளியீட்டையும் மேற்கொள்ளாத காவல்துறையினர், சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் தெரியப்படுத்துமாறு கோரி இன்றையதினம் சந்தேக நபர் தொடர்பான ஓவியம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தொடர்சியாக விசாரணைகள் குறித்து உண்மை தன்மையை வெளிப்படுத்தாத நிலையில், தற்போது சந்தேக நபர் என்ற அடிப்படையில் ஓவியம் ஒன்றையும் வெளியிட்டு மக்கள் மத்தியில் காவல்துறை விசாரணை தொடர்பில் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |