மன்னாரில் முச்சக்கர வண்டியில் திருடப்பட்ட மாடுகள்! காவல்துறையினர் அதிரடி
மன்னார் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மன்னார் தாராபுரம் பிரதான வீதி பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியில் சட்ட விரோதமான முறையில் கொண்டு கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகளை மன்னார் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
குறித்த இரண்டு மாடுகளும் இன்று சனிக்கிழமை (4) காலை திருடப்பட்டு சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட நிலையிலே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, சட்ட விரோதமான முறையில் குறித்த மாடுகளை முச்சக்கர வண்டியில் ஏற்றி வந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட நபர் மன்னார் எமில் நகர் பகுதியை சேர்ந்த 34 வயதுடையவர் என்றும் மன்னாரில் காவல்துறை கான்ஸ்டபிளாக கடமையாற்றி தற்காலிகமாக பதவியில் இருந்து இடை நிறுத்தப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

மேலும், அவருக்கு உதவியவர்கள் என்ற அடிப்படையில் மேலும் இருவரை காவல்துறை தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் மன்னார் காவல்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
5 நாட்கள் முன்