திருக்கேதீஸ்வர ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று - நெருக்கடியிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு (படங்கள்)
Mannar
Sri Lankan Peoples
Hinduism
Sri Lanka Fuel Crisis
By Vanan
மஹா கும்பாபிஷேகப் பெருவிழா
திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு சிவ சிறி தியாகராஜா கருணானந்த குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகம் இடம்பெற்றது.
மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு கடந்த 30ஆம் திகதி பூர்வாங்க கிரிகைகள் இடம்பெற்றது.
எண்ணெய் காப்பு
அதனைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை (5) மதியம் 12 மணி வரை எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
அதனையடுத்து சுவாமிகளுக்கான கிரியைகள் இடம்பெற்றதுடன் யாகப் பூஜைகளும் நடைபெற்றது.
இன்று புதன்கிழமை (6) காலை 9 மணி அளவில் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது.
இதன் போது குருக்கள் மற்றும் மக்கள் என பல ஆயிரக்கணக்கானவர்கள் குறித்த கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்துகொண்டிருந்தனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்