யாழில் வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் நேற்றைய தினம்(21) வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
நேற்றைய தினம் வீடொன்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அப் பகுதி மக்கள் குறித்த வீட்டில் வசித்து வந்த நபர் சில நாட்கள் வெளியே நடமாடாத காரணத்தால் உறவினருக்கு அறிவித்துள்ளனர்
சடலமாக காணப்பட்டவர்
உடனடியாக உரிய இடத்திற்கு சென்ற உறவினர்கள் வீட்டினை திறந்து பார்த்த போது வீட்டில் வசித்த ஆண் சடலமாக காணப்பட்ட நிலையில் மருதங்கேணி காவல்துறைக்கு அறிவித்துள்ளனர்

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் முதல் கட்ட விசாரணையில் சடலமாக காணப்பட்டவர் செம்பியன் பற்று வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை செல்வசிங்கம் என தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மருதங்கேணி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |