அமைச்சுப்பதவி வழங்க கோரி கோட்டாபயவை நச்சரிக்கும் ஆளும் கட்சி எம்.பிக்கள்
அமைச்சு பதவி
ஆளும் கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரச தலைவர் கோட்டாபயவை சந்தித்து தமக்கு விரைவில் அமைச்சு பதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கோட்டையிலுள்ள அரச தலைவர் மாளிகையில் அரச தலைவரை சந்தித்த நாடாளுமன்ற குழுவினரே, தமக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியை விரைவில் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிராமங்களுக்கு கூட செல்ல முடியாது
தாம் அமைச்சராக இருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல வேலைத்திட்டங்களை தற்போது நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எனவே அவற்றை முன்கொண்டு செல்ல வேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சுப்பதவி இன்றி தமது கிராமங்களுக்கு கூட செல்ல முடியாது என சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அமைச்சரவை அமைச்சர்களை தொடர்பு கொண்டு இந்த முயற்சிக்கு தமக்கு ஆதரவளிக்குமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கும் திகதி தொடர்பில் அரச தலைவர் எதனையும் தெரிவிக்கவில்லை என அறியமுடிகின்றது.
இதேவேளை, அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பற்றாக்குறையால் முன்னாள் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பலர் விரக்தியடைந்துள்ளதாக தெரியவருகிறது.
