இலங்கை வங்கிகளில் அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி
இலங்கையில் உள்ள வணிக வங்கிகளில் புதன்கிழமையுடன் (09) ஒப்பிடும்போது இன்று (11) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
செலான் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே ரூபா 297.10 மற்றும் ரூபா 303.60 ஆக மாறாமல் உள்ளன.
தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூபா 297.75 இலிருந்து ரூபா 297.60 ஆகவும், விற்பனை பெறுமதி ரூபா 304.25 இலிருந்து ரூபா 304.10 ஆகவும் குறைந்துள்ளது.
கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி
மக்கள் வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூபா 297.54 இலிருந்து ரூபா 297.29 ஆகவும், விற்பனை பெறுமதி ரூபா 304.79 இலிருந்து ரூபா 304.54 ஆகவும் குறைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே ரூபா 295.30 மற்றும் ரூபா 303.75 ஆகக் குறைந்துள்ளது.
சம்பத் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூபா 297.50இலிருந்து ரூபா 297.25 ஆகவும், விற்பனை விலை ரூபா 304இலிருந்து ரூபா 303.75 ஆகவும் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாணயமாற்று விகிதம்
இதேவேளை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (11.07.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296.85 ஆகவும் விற்பனைப் பெறுமதி 304.43 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 401.06 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 414.30 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 345.01 ஆகவும் விற்பனைப் பெறுமதி 357.14 ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215.36 ஆகவும் விற்பனைப் பெறுமதி 223.56 ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய (Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 193.14 ஆகவும் விற்பனைப் பெறுமதி 202.80 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 229.89 ஆகவும் விற்பனைப் பெறுமதி 239.48 ஆகவும் பதிவாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
