சிறுமியை சீரழித்த நபருக்கு ஆண்மை நீக்கம்: பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு
இமெரின்சியாடோசிகா பகுதியில் ஆறு வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்தி கொலை செய்ய முயன்றதாக இந்த வழக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் முடிவில் குற்றவாளிக்கு நீதிமன்றத்தால் கடின உழைப்புடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ஆண்மை நீக்கம் செய்யுமாறும் உத்தரவிட்டபட்டது.
அறுவைசிகிச்சை
மடகாஸ்கரில் பத்து வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய சிறுமிகளை தகாதமுறைக்கு உட்படுத்தும் குற்றவாளிகளுக்கு 2024 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சட்டத்தின் ஒரு பகுதியாக அறுவைசிகிச்சை ஊடாக ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
நீதிமன்றங்களில் இதுபோன்ற பல வழக்குகளைப் பதிவு செய்த நிலையில், இப்படியான ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்தியதாக அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.
இந்த தீர்ப்பு நீதி அமைப்பிலிருந்து ஒரு வலுவான மற்றும் குறிப்பிடத்தக்க பதிலாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, இதேபோன்ற தீங்கிழைக்கும் நோக்கங்களைக் கொண்ட எவருக்கும் ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கும் என மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அட்டர்னி ஜெனரல் டிடியர் ரசாஃபின்ட்ராலம்போ தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றவாளி
செக் குடியரசு மற்றும் ஜேர்மனியில் சில பாலியல் குற்றவாளிகளுக்கு பிரதிவாதியின் ஒப்புதலுடன் அறுவை சிகிச்சை ஊடாக ஆண்மை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
சிறார்களுக்கு எதிரான சில பாலியல் குற்றங்களுக்காக ஆண்மை நீக்கம் செய்யும் நடைமுறையை கட்டாயமாக்கிய முதல் அமெரிக்க மாகாணமாக லூசியானா கடந்த ஆண்டு மாறியது.
இப்படியான தண்டனைகள் அமெரிக்காவின் பல மாகாணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் போலந்து மற்றும் தென் கொரியாவிலும் இரசாயன முறைப்படி ஆண்மை நீக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிலும் இதுபோன்ற தண்டனையை கட்டாயமாக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், வழக்கம் போலவே மனித உரிமைகள் ஆர்வலர்கள் இரசாயன முறைப்படியும் மருத்துவ ரீதியாகவும் ஆண்மை நீக்கம் தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடப்படத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
