யாழ். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்
புதிய இணைப்பு
வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் 4 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவர்கள் பெற்றுக் கொண்ட சிறந்த பெறுபேறுகள் வருமாறு யோகேந்திரன் தருசன் 9ஏ, ஜூட்நிரோசன் தரணிகா 9ஏ, மனோரஞ்சனராசா துவாரகா 9ஏ, ரமணன் யாழினி 9ஏ, கிருஷ்ணமூர்த்தி நிருபா 8ஏ பி, சரவணபன் சிவகாமி 8ஏ பி, சிவாசன் குகாஜினி 7ஏ 2பி, விக்னேஷ்வரன் கோபிகா 7ஏ 2பி, ஜோர்ஜ் ஜெயபாலன் மெர்சி நித்திலா 7ஏ பி சி, சிவநீதன் சாருஜா 6ஏ 2பி சி, பரந்தாமன் தர்மிகா 5ஏ 3பி சி, மகாலிங்கம் கஜன் 5ஏ 3பி எஸ், ஜெயச்சந்திரன் ஜெனோசா 5ஏ 2பி 2சி, பேரின்பராசா பவிசன் 5ஏ பி 2சி எஸ், அருந்தவன் சரணியா 4ஏ 4பி சி, ரஜணிதரன் டனுஷா 4ஏ 3பி 2சி, புவனேஸ்வரன் சிவாஜெனி 4ஏ 2பி 3சி, சௌந்தரராசா துவாரகா 4ஏ 4சி எஸ்.
மூன்றாம் இணைப்பு
2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்துக் கல்லூரியில் (Jaffna Hindu College) 82 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
73 மாணவர்கள் 8 பாடங்களிலும், 33 மாணவர்கள் 7 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
அதேவேளை, 24 மாணவர்கள் 6 பாடங்களிலும், 20 மாணவர்கள் 5 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர். பரீட்சைக்குத் தோற்றிய 345 மாணவர்களில் 342 பேர் சித்தியடைந்துள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளில் கிளிநொச்சி மகாவித்தியாலயம் வெளியாகியிருக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கிளிநொச்சி மகாவித்தியாலயம் முன்னணியில் உள்ளது.
அந்த வகையில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 23 பேர் 9 ஏ சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அத்துடன் 16 மாணவர்கள் 8ஏ சித்திகளைப் பெற்றுள்ளார். 8 மாணவர்கள் 7ஏ சித்திகளைப் பெற்றுள்ளார். 14 மாணவர்கள் 6ஏ சித்திகளைப் பெற்றுள்ளார். 7 மாணவர்கள் 5ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.
மேலும், 225 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில், அவர்களுள் 220 பேர் சித்தியடைந்துள்ளதுடன், 68 மாணவர்கள் அதி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
முதலாம் இணைப்பு
2024 (2025) – கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களம் (Department of Examinations) வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் வெளியான சாதாரண பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் வவுனியா - இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் தமிழ் மொழி மூலம் 23 மாணவர்களும் ஆங்கில மொழி மூலம் 11 மாணவர்களுமாக 34 மாணவர்கள் 9 பாடங்களில் ஏ தர சித்தியை பெற்றுள்ளனர்.
இதேவேளை 17 மாணவர்கள் தமிழ் மொழி மூலமாகவும் 3 மாணவர்கள் ஆங்கில மொழி மூலமாகவும் 8 பாடங்களில் ஏ தர சித்தியையும் பெற்றுள்ளனர்.
பரீட்சை மீள் மதிப்பீட்டு
இதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி (A.K.S. Indika Kumari) தெரிவித்துள்ளார்.
இது சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 73.45% என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், 13,392 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் 9 A சித்திகளை பெற்றுள்ளதாகவும் இது மொத்தப் பரீட்சார்த்திகளில் 4.15% என பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
மேலும், பரீட்சை மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள் ஜூலை 14 முதல் 28 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

