கனேடிய தங்கச் சுரங்கமொன்றில் மில்லியன் டொலர் தங்கம்: எவ்வளவு தெரியுமா !
மாலியில் உள்ள கனேடிய நிருவத்திற்குச் சொந்தமான தங்கச் சுரங்கத்தில் திடீரென அந்நாட்டு அரசாங்க ஹெலிகாப்டர்கள் தரையிறங்கி, 117 மில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கத்தை கைப்பற்றிச் சென்றுள்ளது.
இது தொடர்பில் Barrick நிறுவனம் தெரிவித்ததுள்ளபடி, இந்த ஹெலிகாப்டர்கள் முன்னறிவிப்பு இன்றி வந்ததாகவும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் அரசின் தற்காலிக நிர்வாகம் மூலம் விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொலர் தங்கம்
இதற்கிடையில், மாலி அரசு கடந்த ஜனவரியிலும் மூன்று மெட்ரிக் டன் (3000 கிலோகிராம்) தங்கத்தை எடுத்துள்ளதாகவும் Barrick நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மாலி அரசு கடந்த மாதம், வழக்குகளுக்குப் பிறகு தற்காலிக நிர்வாகத்தைக் கொண்டு தங்க சுரங்கத்தை மீண்டும் இயக்கத் திட்டமிட்டது.
ஏற்பட்ட முரண்பாடுகள்
ஆனால் Barrick நிறுவனத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகள் 2023 இல் தொடங்கியதாகவும், பின்வாங்கப்பட்ட வரிகள் மற்றும் புதிய சுரங்கச் சட்டங்கள் மூலம் அரசுக்கு அதிக பங்கு வேண்டியதாயிற்று எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Barrick நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் பிரிஸ்டோவ், “நாங்கள் இந்த பிரச்சனையை சர்வதேச சட்ட வழிகள் மூலம் தீர்க்கும் நோக்கத்தில் இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
