வெறும் ஆறு மணி நேரத்திற்குள் செல்வாக்கை இழந்த மார்க் ஜுக்கர்பெர்க்!!
சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வட்ஸ் ஆப் இன்ஸ்டாகிராம் போன்றன சர்வதேச ரீதியில் முடங்கியமையானது இதுவரை கண்டிராத மிகப்பெரிய தோல்வி என செயலிகளின் சேவைகள் மற்றும் சிக்கல்கள் குறித்து கண்காணிக்கும் டவுன் டிடெக்டர் (Down Detector) தெரிவித்துள்ளது.
பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன நேற்று இரவு முதல் சுமார் ஆறு மணி நேரங்கள் சர்வதேச ரீதியில் செயலிழந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் வழமைக்கு திரும்பியிருந்தன.
இந்த நிலையில் பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க்கின் (Mark Zuckerberg) தனிப்பட்ட சொத்து 7 பில்லியன் அமெரிக்க டொலரினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து அவர் உலக செல்வந்தர்கள் பட்டியலில் ஒரு இடம் பின்தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் குறித்த பட்டியலில் மார்க் ஸக்கர்பேர்க்கை ஐந்தாவது இடத்திற்கு பின்தள்ளி பில் கேட்ஸ் (Bill Gates) நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகவும் தெரியவருகிறது.
அத்துடன் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் 4.9 சதவீதத்தினால் சரிவை எதிர்நோக்கியுள்ளதாகவும் இதனபடி 121.6 பில்லியன் ரூபா வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் நாஸ்ட்காம் பங்குச்சந்தையில் இந்நிறுவன பங்குகள் 7 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தது. இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனத்துக்கு 700 கோடி டொலர்கள் இழப்பு ஏற்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.