நாடாளுமன்ற உறுப்பினராக மொஹம்மட் தாஹிர் சத்தியப்பிரமாணம்
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹம்மட் தாஹிர் (Marikkar Mohamed Thahir) சற்றுமுன்னர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இஸ்மாயில் முத்து முஹம்மது கடந்த மாதம் 28ஆம் திகதி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து வெற்றிடமான பதவிக்கு மரிக்கார் மொஹம்மட் தாஹிர் நியமிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்கு மரிக்கார் மொஹம்மட் தாஹிரை பரிந்துரைத்தது.
வர்த்தமானி வெளியீடு
அதன்படி, 1988 ஆம் ஆண்டு 35 ஆம் எண் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் பிரிவு 6ஆல் திருத்தப்பட்ட 1981 ஆம் ஆண்டு 1 ஆம் எண் நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரிவு 64(5) இன் படி, மரிக்கார் முகமது தாஹிரை நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கும் வர்த்தமானியை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டது.

வர்த்தமானி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து பதவியேற்றதன் மூலம், தாஹிர் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக உத்தியோகபூர்வமாக கடமைகளை ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |