இளவயதினரை மிரட்டும் ஆண்மைக் குறைபாடு: தேன் இத்தனை நன்மைகளைச் செய்கிறதா??
இரத்தம் அதிகரித்து ஆண்மை, உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக அதிகரிக்கும். அத்திப்பழம், பேரிச்சம்பழம், தேன் ஆகிய மூன்றுமே சிறந்த இயற்கை ஆரோக்கிய உணவுகளாகும். இவை அனைத்தும் நீங்கள் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக அதிகரிக்கும்.
குறிப்பாக பேரிச்சம்பழம் - தேன் கலவை மற்றும் அத்திப்பழம் - தேன் கலவை சாப்பிட்டு வருவதால் உடலில் இரத்தம் அதிகரித்து ஆண்மையும் பெருகும்.
தேன் - பேரிச்சம்பழம்
தேவையான பொருள்கள்:
பேரிச்சம்பழம் (விதை நீக்கியது) சுத்தமான தேன், குங்குமப்பூ
பாத்திரத்திரமொன்றில் அரைக்கிலோ பேரிச்சம்பழம் மற்றும் அரைக் கிலோ தேனை போடவும், அதன் மீது குங்குமப்பூவை சிறிதளவு தூவ வேண்டும். காலையில் 7 தொடக்கம் 8 மணியளவில் இளம் வெயில் நேரத்தில் அரை மணி நேரம் அதனை ஊற வைக்க வேண்டும்.
ஊறிய பிறகு அதை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரவு உறங்க செல்லும் முன்னர், அதில் இருந்து இரண்டு பேரிச்சம் பழத்தை எடுத்து சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு செல்ல வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்துவர உடலில் இரத்தம் அதிகரித்து ஆண்மை தன்மையும் பெருகும்.
அத்திபழம் - தேன்
தேவையான பொருள்கள்:
அத்திப்பழம், சுத்தமான தேன், குங்குமப்பூ
அரைக்கிலோ அத்திப்பழம், தேன் மற்றும் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து கலந்து கொள்ளவும். காலை நேரத்தில் இளம் வெயில் நேரத்தில் அரை மணிநேரம் ஊறவைத்து எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
இரவு உறங்கும் முன்னர் இரண்டு அத்திப்பழம் சாப்பிட்டு பிறகு ஒரு டம்ளர் பால் குடித்த பிறகு உறங்குங்கள். இரத்த சோகை இந்த இரண்டு கலவை சாப்பிட்டு முடிக்கும் ஒரு மாத காலத்தில் உங்கள் உடலில் சுத்தமான இரத்தம் உருவாகும்.
இரத்த சோகை இருக்கும் நபர்கள் உடலில் இரத்தம் அதிகரித்து ஆரோக்கியமாக இருப்பார்கள்.
ஆண்மை
இயல்பாகவே ஆண்மை தன்மையினை அதிகரிக்க அத்திப்பழம் ஒரு சிறந்த உணவுப் பொருள். மேலும், பாலில் உள்ள மூலக்கூறுகளும் ஆண்மை தன்மை பெருக உதவுகிறது. அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவது உங்கள் ஆண்மை தன்மை பெருக வெகுவாக உதவும்.
இஞ்சியை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
வயிற்று பிரச்சனைகள் நீங்கும் வயிற்று பிரச்சனைகளுக்கு இஞ்சி ஒரு நல்ல நிவாரணத்தை வழங்கும். இது வயிற்றில் உள்ள அதிகப்படியான வாயுவை வெளியேற்ற பெரிதுவும் உதவியாக இருக்கும்.
மேலும் அஜீரண பிரச்சினைகளால் அவஸ்தைப்பட்டால், உணவு உட்கொண்ட பின் தேனில் ஊற வைத்த இஞ்சியை ஒரு துண்டு சாப்பிடுங்கள். இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும்.
டி.என்.ஏ பாதிப்பைத் தடுக்கும்
நவீன ஆராய்ச்சி ஒன்றில், இஞ்சி ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்று செயல்பட்டு, உடலைத் தாக்கும் தீங்கு விளைக்கும் ப்ரீ-ராடிக்கல்களினால் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும். மேலும் இது டி.என்.ஏ பாதிப்பைத் தடுத்து, விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெறாமல் தடுக்கும். எனவே நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க நினைத்தால், தேனில் ஊற வைத்த இஞ்சியை ஒரு துண்டு சாப்பிடுங்கள்.
இருமல், சளியில் பிரச்சினையிலிருந்து விடுபட உதவும்
பழங்காலம் முதலாக இஞ்சி சளி மற்றும் இருமலில் இருந்து விடுபட பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக இஞ்சி சுவாச பாதையில் உள்ள தொற்றுக்களை சரிசெய்வதோடு, சளி முறிவதற்கு உதவியாக இருக்கும். ஏனெனில் இஞ்சியில் உள்ள வெப்பமூட்டும் பண்புகள், இறுகி உள்ள சளியை இளகச் செய்து வெளியேற்றும். நீங்கள் சளி, இருமலால் அவஸ்தைப்பட்டால், தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடுங்கள்.
புற்றுநோயைத் தடுக்க உதவும்
நவீன மருத்துவ ஆராய்ச்சியில் இஞ்சி புற்றுநோயைத் தடுப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இஞ்சியானது உடலைத் தாக்கிய புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோய் உடல் முழுவதும் பரவுவதைத் தடுக்கும். எனவே தேனில் ஊற வைத்த இஞ்சியை தினமும் சிறிது சாப்பிடுங்கள். இதனால் புற்றுநோய் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.
பயணத்தின் போது ஏற்படும் வாந்தியைக் குறைக்க உதவும்
சிலருக்கு பயணம் மேற்கொண்டால், வாந்தி வருவது போன்ற உணர்வு வரும். இதனாலே பலர் பயணம் மேற்கொள்வதற்கு யோசிப்பர். ஆனால் இஞ்சி இந்த பிரச்சனையைக் குறைக்க உதவியாக இருக்கும். இஞ்சியில் உள்ள மருத்துவ பண்புகள், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் செயல்பட்டு, வாந்தி அல்லது குமட்டல் வருவது போன்ற உணர்வைக் குறைக்கும்.
ஆஸ்துமாவிற்கு நல்லது
ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு இஞ்சி நல்லது. பழங்காலத்தில் ஆஸ்துமா பிரச்சனைக்கு தீர்வளிக்க இஞ்சி பயன்படுத்தப்பட்டு வந்தது. அதிலும் இஞ்சி சாறு குடிக்கப் பிடிக்காதவர்கள், இஞ்சியை தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வரலாம். இது சுவையாக இருப்பதுடன், ஆஸ்துமா பிரச்சனைக்கும் தீர்வளிக்கும்.
ஆர்த்ரிடிஸ் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்
மூட்டு வலியைக் குறைக்கும் மற்றும் ஆர்த்ரிடிஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும். இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளான ஜின்ஜெரால் என்னும் பொருள் தான், ஆர்த்ரிடிஸ் பிரச்சனையைக் குறைக்க உதவுகிறது. ஆகவே ஆர்த்ரிடிஸ் இருப்பவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த இஞ்சி துண்டை சாப்பிடுங்கள்.
இதனால் விரைவில் ஆர்த்ரிடிஸ் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இரத்த சர்க்கரை அளவு குறையும் இஞ்சி உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.
இதனால் சர்க்கரை நோய் வருவதற்கான அபாயமும் குறையும். மேலும இது உடலில இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றம் செய்யும் நொதிகளின் உற்பத்தியிலும் பங்கு கொள்ளும். எனவே உங்களுக்கு சர்க்கரை நோய் வராமல் இருக்க வேண்டுமா? அப்படியானால் தினமும் தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடுங்கள்.
ஒற்றைத் தலைவலி மற்றும் மாதவிடாய் வலி நீங்கும்
ஒற்றைத் தலைவலியில் இருந்து இயற்கையாக சரிசெய்யும். மேலும் உடலில் ஏற்படும் பல வலிகளான உடல் வலி, மூட்டு வலி, கால் வலி, மாதவிடாய் கால வயிற்று வலி மற்றும் இதர வலிகளையும் போக்கும். அடிக்கடி உங்களுக்கு உடல் வலி ஏற்படுமாயின், அதனைத் தவிர்க்க தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடுங்கள்.
இதயத்திற்கு நல்லது
இஞ்சியில் உள்ள கனிமச்சத்துக்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்க உதவும். மேலும் பழங்காலத்தில் இதய பிரச்சினைகளுக்கு இஞ்சி தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தேனில் ஊற வைத்த இஞ்சியை தினமும் சிறிது சாப்பிடுங்கள். இதனால் உங்கள் இதயம் எப்போதும் ஆரோக்கியமாக செயல்படும்.
எடை குறைய உதவும்
எடையைக் குறைக்க முயற்சிக்கிறீர்களா? உங்கள் எடையைக் குறைக்க இஞ்சி தேன் கலவை பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடலாம் அல்லது இஞ்சியை அரைத்து சாறு எடுத்து, தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம். இதனால் உங்கள் எடை விரைவில் குறைவதைக் காணலாம்.