யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம் - 400 பேர் பாதிப்பு: காரணத்தை வெளியிட்ட வைத்திய நிபுணர் மலரவன்

Jaffna Sri Lanka Police Investigation Jaffna Teaching Hospital National Health Service
By Thulsi Aug 22, 2026 02:24 AM GMT
Report

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவைத் தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் கண் பாதிப்புகளுக்காக மருத்துவ சிகிச்சை பெறும் சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID) வெளிப்பாட்டினால் ஏற்படக்கூடிய கண் பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக கண் வைத்திய நிபுணர் மலரவன் தனது மருத்துவ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.  

சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை, நேற்று இரவு நிலவரப்படி 400-ஐ நெருங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

யாழில் ஆலயத்தில் அதிகளவான ஒளி பாவனை! 120க்கும் மேற்பட்ட பக்தர்கள் கண் பிரச்சினையால் வைத்தியசாலையில்

யாழில் ஆலயத்தில் அதிகளவான ஒளி பாவனை! 120க்கும் மேற்பட்ட பக்தர்கள் கண் பிரச்சினையால் வைத்தியசாலையில்

லேசர் ஒளிக்கீற்றுகள்

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில் வாணவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் பயன்படுத்தப்பட்டதால், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம் - 400 பேர் பாதிப்பு: காரணத்தை வெளியிட்ட வைத்திய நிபுணர் மலரவன் | Mass Eye Irritation Jaffna Temple Cause Revealed

இதன் காரணமாக பலருக்கு கண்களில் எரிச்சல், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 400 ஐ நெருங்கியுள்ளது.

பார்வை தொடர்பான பிரச்சினை

பாதிக்கப்பட்டவர்களில் தற்போது க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் உட்பட பாடசாலை மாணவர்களும் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம் - 400 பேர் பாதிப்பு: காரணத்தை வெளியிட்ட வைத்திய நிபுணர் மலரவன் | Mass Eye Irritation Jaffna Temple Cause Revealed

“பொதுமக்கள் எவ்வித பதற்றமும் இன்றி உடனடியாக வைத்தியசாலைகளை நாடலாம். அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன” என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.  

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்குச் செல்லுமாறு பிரதேச சபையினால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக கண்களில் பாதிப்பு, எரிச்சல் அல்லது பார்வை தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டவர்கள் தாமதிக்காமல் அருகிலுள்ள வைத்தியசாலையை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழில் ஆலயத்தில் பலரது கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய மின்விளக்குகள் பறிமுதல்!

யாழில் ஆலயத்தில் பலரது கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய மின்விளக்குகள் பறிமுதல்!


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025