செம்மணியில் காட்சிப்படுத்தபட்ட பொருட்கள்: நீதிமன்றத்தை பாராட்டிய மக்கள்
யாழ் (Jaffna) செம்மணி புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்கள் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில், நேற்று (05) செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணி முதல் மாலை ஐந்து மணி வரையில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
மீட்கப்பட்ட குறித்த சான்று பொருட்களை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
தனிமனிதனோடு தொடர்புடைய சான்று பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், இனிவரும் காலங்களிலும் தனிமனிதனோடு தொடர்புடைய சான்று பொருட்கள் மீட்கப்பட்டால் அவற்றையும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பிலும், செம்மணியின் அடுத்த கட்ட நகர்வு, யாழில் தொடர் எலும்புக்கூடுகளின் மீட்பில் அரசின் பார்வை, சர்வதேசத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் செம்மணியின் அண்மைய செய்திகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய உண்மைகள் பேசட்டும் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
