21 வருடங்களுக்கு முன்னர் படுகொலை : நால்வருக்கு மரணதண்டனை
காணி தகராறு காரணமாக கூரிய ஆயுதங்களால் வெட்டி ஒருவரைக் கொன்று மற்றவரை காயப்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு பலப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க இன்று மரணதண்டனை விதித்தார்.
21 வருடங்களுக்கு முன்னர் அமுகொட அளுத்வத்த பிரதேசத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகத் தெரிவித்து நான்கு பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அதே குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 08 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
நீதிமன்றில் முன்னிலையாகாத
இந்த வழக்கில் முன்னிலையாகாமல் நீதிமன்றத்தை அவமதித்த கெம்பட நெட்டியைச் சேர்ந்த அஜித் குமார அபேசேகர என்பவரை கைது செய்யுமாறு திறந்த பிடியாணை பிறப்பித்த நீதிபதி, அவரை உடனடியாக கைது செய்து தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
ஒருவர் கொலை மற்றயவர் படுகாயம்
டிசம்பர் 16, 2002 இல், அமுகொட அளுத்கெதர வத்தையில் வசிக்கும் களுபஹா காமினி நிஹால் என்பவரை கொலை செய்ததற்காகவும், அமுகொடல அளுத்கெதர வத்தையைச் சேர்ந்த களுபஹா காமினியின் கையை வெட்டி அவரை கடுமையாக காயப்படுத்தியமை தொடர்பாக 12 பேர் மீது சட்டமா அதிபர் குற்றம் சாட்டியிருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |