கிளப் வசந்த படுகொலை : வெளியான காரணம்
மாக்கந்துரே மதுஷை கைது செய்வதற்கு பாதுகாப்பு படையினருக்கு தகவல் வழங்கிய முதல் நபராக கிளப் வசந்த கொல்லப்பட்டதாக கஞ்சிபானி இம்ரான் தெரிவித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுஷ் தொடர்பில் விசாரணை நடத்திய கொழும்பு (Colombo) குற்றப்பிரிவு மற்றும் மேற்கு வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளும் கொல்லப்படுவார்கள் என கஞ்சிபானி இம்ரான் கூறியதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதன்படி, காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் (Deshabandu Tennakoon) பணிப்புரையின் பேரில், காவல்துறை தலைமையகம் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதுருகிரியில் சுட்டுக்கொல்லப்பட்ட கிளப் வசந்தவின் சடலம் பொரளையில் உள்ள ஜயரத்ன மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், மலர்சாலைக்கு மீண்டும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அத்துருகிரிய பிரதேசத்தில் கடந்த (08) ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கிளப் வசந்த உள்ளிட்ட மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன், கிளப் வசந்தவின் மனைவி மற்றும் பாடகி சுஜீவா உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை ஐபிசி தமிழின் காலை நேர செய்தியில் காண்க
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |