கனடாவில் இலங்கையர்கள் படுகொலை : இறுதி கிரியைகள் தொடர்பில் வெளியான தகவல்
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதி கிரியைகள் அங்குள்ள பௌத்த விகாரையில் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த படுகொலை முயற்சியிலிருந்து படுகாயத்துடன் தப்பிய குடும்பத் தலைவரான தனுஷ்க விக்கிரமசிங்கவின் வேண்டுகோளின் பேரில் இந்த இறுதி கிரியைகள் நடைபெறவுள்ளன.
இறுதிச் சடங்கிற்காக இலங்கையில் இருந்து
அத்துடன், இறுதிச் சடங்கிற்காக இலங்கையில் இருந்து அவர்களது உறவினர்கள் வரவுள்ளதாக ஒட்டாவாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை இரவு கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பார்ஹேவன் என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் பிராங்க் டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கையைச் சேர்ந்தவரால் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருந்தவர்
இந்த சந்தேக நபர் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருந்தவர் என பௌத்த விகாரையின் வணக்கத்திற்குரிய மஹாகம சுனீத தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த பாரிய கொலைக்கு பிராங்க் டி சொய்சா சில கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தினாரா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணைகளில் கவனம் செலுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், தற்போது படுகாயமடைந்த தனுஷ்க விக்ரமசிங்கவின் அனுமதியின்படி உயிரிழந்த தர்ஷனி ஏகநாயக்க மற்றும் அவரது 4 பிள்ளைகளின் இறுதிக் கிரியைகள் பிரேத பரிசோதனையின் பின்னர் பார்ஹேவன் பௌத்த விகாரையினால் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |