பாகிஸ்தானில் மீறப்பட்டது பாரம்பரியம் : முதல் பெண்மணியானார் ‘மகள்’
பாகிஸ்தான் அதிபராக ஆசிப் அலி சர்தாரி பதவியேற்ற நிலையில், அவர் தனது மகள் ஆசிஃபா பூட்டோவை பாகிஸ்தானின் முதல் பெண்மணி என்று அழைக்க முடிவு செய்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆசிப் அலி சர்தாரி. ஆசிப் அலி சர்தாரிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர், கடந்த பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் 'பாகிஸ்தான் ஜனதா கட்சி' சார்பில் சர்தாரியின் மகன் பிலாவில் பூட்டோ, போட்டியிட்டார்.
மகளுக்கு 'முதல் பெண்மணி'
பொதுவாக, அதிபராக வருபவர் மனைவிக்கு 'முதல் பெண்மணி' என்ற பட்டம் வழங்கப்படும், ஆனால், சர்தாரி தபுதாரன் என்பதால், தன் மகளுக்கு 'முதல் பெண்மணி' என்ற பட்டத்தை வழங்க சர்தாரி எடுத்த முடிவு தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது.
பாகிஸ்தானின் 'முதல் பெண்மணி'யாக ஒரு மகள் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. பாகிஸ்தான் முதல் பெண்மணிக்கான அனைத்து சலுகைகளும் ஆசிஃபா பூட்டோவுக்கு உண்டு.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |