ட்ரம்பின் பின்வாங்கலுக்கு மத்தியில் ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது பாரிய தாக்குதல்
எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படாது என அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்கா பின்வாங்கிய நிலையில் இரண்டு எரிவாயு நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பின்வாங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இரண்டு எரிவாயு நிலையங்களையும் ஒரு குழாய்வழியையும் அமெரிக்க - இஸ்ரேலியத் தாக்குதல்கள் குறிவைத்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
"இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க எதிரிகளால் நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களின் ஒரு பகுதியாக, இஸ்பஹானில் உள்ள காவே தெருவில் அமைந்துள்ள எரிவாயு நிர்வாகக் கட்டிடம் மற்றும் எரிவாயு அழுத்த ஒழுங்குமுறை நிலையம் ஆகியவை குறிவைக்கப்பட்டன," என்று குறித்த செய்தி வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சேதமடைந்த எரிசக்தி வசதிகள்
இதனால் மத்திய ஈரானில் உள்ள குறித்த எரிசக்தி வசதிகள் பகுதியளவு சேதமடைந்தன என்றும் செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தென்மேற்கில் உள்ள கோர்ரம்ஷாஹர் மின் உற்பத்தி நிலையத்தின் எரிவாயுக் குழாயையும் இந்தத் தாக்குதல் குறிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |