மீண்டும் அதிரவுள்ள கொழும்பு -ஆட்டம் காணுமா அரசு...!
Colombo
Anura Kumara Dissanayaka
Sri Lankan protests
Election
By Sumithiran
தேர்தலை நடத்துவதற்கான போராட்டத்தை எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதியன்று மீண்டும் கொழும்பில் ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மக்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டுள்ளதால், தற்போதைய அரசியல் அமைப்பை மாற்ற விரும்பும் ஆயிரக்கணக்கான மக்களால் கொழும்பில் வெள்ளம் பாய்வதற்கு முன்னர் ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம் மற்றும் கம்பஹா ஆகிய இடங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக குறிப்பிட்டார்.
பாரிய ஆர்ப்பாட்டங்கள்
உள்ளூராட்சி சபைத்தேர்தல்,மாகாணசபைத் தேர்தல் ஆகியவற்றை நடத்தாமல் அரசாங்கம் அடுத்தவருடம் அதிபர் தேர்தலை நடத்துவதில் குறியாக உள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி