“தமிழினத்தை அழிக்காதே” - வடக்கு ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் போராட்டம்
புதிய இணைப்பு
வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சாள்ஸ் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
லஞ்ச ஊழல் பெருச்சாளி திருமதி சாள்ஸ் ஆளுநருக்கு எதிரான போராட்டம் - எனும் தொனியில் இப்போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தின் போது ''லஞ்ச ஊழலை வளர்க்காதே, ஊழல்வாதிகளை காப்பாற்றாதே, தமிழினத்தை அழிக்காதே, தமிழ் கலாசாரத்தை சிதைக்காதே, ஆளுநர் அலுவலகத்தை விட்டு வெளியேறு” போன்ற கோசங்களுடன் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இரண்டாம் இணைப்பு
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் அவர்கள் பதவியேற்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் போராட்டம் ஒன்று இடம் பெற உள்ளதாக கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைய, வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் நியமனத்துக்கு எதிராக இன்று (19.05.2023) காலை யாழ். ஆளுநர் அலுவலகத்தின் முன்னால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.
வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானும், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தனவும் கடந்த புதன்கிழமை (17.05.2023) அதிபர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
