ரஷ்ய தலைநகரில் ஆளில்லா விமானங்கள் பாரிய தாக்குதல்
Russo-Ukrainian War
Ukraine
Russia
By Jaso
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் முதல்முறையாக தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன் காரணமாக மொஸ்கோவின் Vnukovo சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானங்கள்
இந்த தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. அனைத்து ஆளில்லா விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன, உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து உக்ரைன் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில் ,மொஸ்கோவிற்கு அருகே ஐந்து உக்ரைன் ஆளில்லா விமானங்களை இடைமறித்ததாகவும் இது "பயங்கரவாத தாக்குதல்" என்றும் தெரிவித்துள்ளது.
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…! 21 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்