தங்க சுரங்கத்தில் பாரிய குண்டுவெடிப்பு - 60 பேர் பரிதாபகரமாக பலி
death
people
explosion
gold mine
By Sumithiran
தங்கத்தை பதப்படுத்த சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பர்கினா பாசோ (Burkina Faso) என்ற ஆபிரிக்க நாட்டிலேயே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Gaoua எனும் கிராமத்திற்கு அருகிலுள்ள தற்காலிக தங்க சுரங்கமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆபிரிக்க நாடுகள் சிலவற்றில் சுரங்கப் பணிகளை முன்னெடுப்பதன் காரணமாக இவ்வாறு விபத்துகள் அடிக்கடி இடம்பெறுகின்றமை குறிப்பிடப்பட்டுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்