ஈராக்கில் கொரோனா வைத்தியசாலையில் பாரிய தீ -50 பேர் பலி
ஈராக்கில் கொரோனா வைத்தியசாலையில் பற்றிய பாரிய தீயினால் 50 பேர் உயிரிழந்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.
ஈராக்கின் தெற்கு மாகாணம் தி குவாரில் அமைந்துள்ள நசிரியா நகரில் இமாம் உசைன் என்ற வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக தனியான அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு ஒட்சிசன் சிலிண்டர் ஒன்று திடீரென வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
இந்த தீ விபத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. சம்பவம் இடம்பெற்ற வேளை குறித்த விடுதியில் 63 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்குனு முன்னரேயே 70 கட்டில்களை கொண்ட இந்த விடுதி திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ச
ம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது இவ்வாண்டில் கொரோனா வைத்தியசாலையில் இடம் பெற்ற இரண்டாவது தீவிபத்தாகும்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் கொரோனா வைத்தியசாலையில் ஒட்சிசன் சிலிண்டர்கள் வெடித்தமையால் ஏற்பட்ட தீயில் 82 பேர் உயிரிழந்துள்ளதோடு, 110 பேர் காயமடைந்தனர்.