பிரான்ஸில் பாரிய தீப்பரவல் - பல மில்லியன் பொருட்கள் சேதம் (படங்கள்)
France
By pavan
பிரான்ஸ் தலைநகர் பரிசின் Aubervilliers பகுதியிலுள்ள ஆடை விற்பனை நிறுவனத்திற்கு சொந்தமான சேமிப்பகம் ஒன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் விரைவாக தீயை அணைக்க போராடியுள்ளனர்.
ஆடைகள் தீயில் கருகி சேதம்
எனினும் வெகு நேரமாக தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் சேமிப்பகத்தில் இருந்த 35 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதாகவும், இதன்போது பல மில்லியன் மதிப்புள்ள ஆடைகள் தீயில் கருகி சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி