நாட்டில் ஏற்படவுள்ள பாரிய உணவுப்பற்றாக்குறை - நிபுணர்கள் எச்சரிக்கை
செயற்கை இரசாயனமான உரம் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதனால் நாட்டில் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்படவுள்ளதாக விவசாய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
"நாங்கள் சில மாதங்களில் பெரும்போக பருவத்தின் அறுவடைகளைப் பெற இருக்கிறோம். அறுவடை குறைவடைவதால் நாடு பெரும் உணவுப் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஏழை மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்வர். உணவு வேளையை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் கஸ்டப்படுவர்.
தொற்றுநோய்க்கு மத்தியில் இருப்பதால் இந்நிலை உருவாகும்." என்று ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய உயிரியல் துறை பேராசிரியர் நாலிகா ரணதுங்க தெரிவித்துள்ளார்.
"உலகளவில், பூட்டான் அரசாங்கம் முதன்முதலில் இதுபோன்ற ஒரு நடவடிக்கையை மேற்கொண்டது. ஆனால் 2018க்குள் அவர்கள் படிப்படியாக உணவு இறக்குமதி செய்யும் நாடாக மாறி வருவதை உணர்ந்தார்கள். அவர்களின் அரிசி தேவைகளில் 63% மற்றும் மக்காச்சோளம் தேவைகளில் 21% மற்றும் காய்கறி தேவைகளில் 23% இறக்குமதி செய்ய நேரிட்டது.
பூட்டானின் திட்டம் சரியாக செயல்படவில்லை, மக்களுக்கு உணவு வழங்க வேண்டும். அரிசி இறக்குமதிக்கு நாம் நிறைய பணம் செலவிட வேண்டும். எங்கள் நிலைமையை பொருட்படுத்தாமல் - வேதியியல் அல்லது கரிம - ஆலைக்கு தேவையானவற்றை வழங்க முடியாது போனால் உற்பத்தி குறையும். இந்த விவசாயத்திலிருந்து நமக்கு தேவையான அறுவடையை நாம் பெற முடியாது. அது தான் உண்மை. அது ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் உண்மை.
உணவு பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்பு. அந்த தேசிய பாதுகாப்பை நாம் இழந்தால், தற்போதைய பொருளாதார அமைப்பில் எங்களால் மேலும் செல்ல முடியாது ” என்று இலங்கையின் தேசிய விவசாய நிறுவனத்தின் பேராசிரியர் புத்தி மராம்பே தெரவித்தார்.