புலம்பெயர் அமைப்பொன்றின் நிதியில் பாரிய மோசடி! அதிகாரிகள் பாராமுகம்
புலம்பெயர் உறவுகளால் உயிரிழை அமைப்புக்கு வழங்கப்பட்ட 23 கோடி ரூபா பணத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக என முள்ளந்தண்டால் பாதிக்கப்பட்ட உயிரிழை அமைப்பின் உறுப்பினரான சா.குகதாசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நோய் தாக்கங்கள்
“பாதிக்கப்பட்ட நாங்கள் அழுத்துபுண் அதனுடைய செயற்படுகின்ற தாக்கங்கள் காரணமாக 3 வருடம் கடந்து மரணத்துக்கு இட்டுச் செல்லும் அந்த அழுத்ததினால் ஒரு குறுகிய நேரம் மட்டும் தான் சக்கர நாற்காலியில் அமைந்திருக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இந்த அடிப்படையில் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை பிரதேசங்களில் இருந்து உயிரிழை மாங்குளம் பிரதான காரியாலயத்துக்கு இரண்டு நாள் தொடர்ந்து பயணித்து மிகவும் சிரமத்துடன் சென்று வருகின்றோம்.
இவ்வாறான நிலமையில் கடந்த 2022 டிசம்பர் மாதம் தொடக்கம் 31-12-2023 காலப்பகுதியில் ஓராண்டுக்கான கணக்கு அறிக்கையில் வரவாக 8 கோடியே 80 இலச்சத்து 66 ஆயிரத்து 692 ரூபா 90 சதம் என சொல்லப்படுகின்றது .
இது 2002 தொடக்கம் 2005 வரை இறுதி காலம்வரை 23 கோடிக்கு மேற்பட்ட நிதிகள் புலம்பெயர் மக்களால் உயிரிழை அமைப்புக்கு வழங்கப்பட்டது. இருந்தபோதும் எமது அமைப்பில் உள்ள 250 பயனாளிகளில் 56 பேருக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளான உறவுகளை இழந்திருக்கின்றோம்.
இதில் 196 பேரில் 30 பேருக்கு மேற்பட்டவர்கள் உயிருக்கு போராடி வருகின்றனர். இலங்கையிலே மாற்றுத்திறனாளிகள் அமைப்பிலே முதலாம் இடத்தை வகித்த அமைப்பு இன்று பூச்சியத்தில் வந்துள்ளது.
உயிரிழை அமைப்பு
இந்த உயிரிழை அமைப்புக்காக பெறப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் அமைப்பின் தலைவர், உப தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் சேர்ந்து உயிரிழை அமைப்பில் இருந்து அனைத்து முள்ளம்தண்டு பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களையும் பெற்று, இணையவழியில் எங்களுடைய அவையங்கள் அங்க குறைவுகள் புண்களின் படங்களை எடுத்து இணையவழியில் தரவுகளை பதிவு இறக்கம் செய்து புலம் பெயர்ந்தவர்களிடம் நிதி சேர்த்து வியாபார நோக்கமாக பலகோடி பணத்தை சேர்த்து கொண்டனர்.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட பணத்தை பொருளாளராக இருந்தவரின் தனிப்பட்ட வங்கி கணக்குக்கு 2 கோடிக்கு மேற்பட்ட நிதி போயுள்ளது. இதை வெளிப்படுத்த இந்த தரவை பெற்றபோது அவர்களது இணையம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதில் உயிரிழைக்கு வழங்கப்பட்ட பணம் எந்த வொரு சந்தர்ப்பத்திலும் திரும்ப பெற முடியாது இந்த பணம் சேர்க்கப்பட்டது இதில் வரும் வருவாயில் இருந்து கழுத்துக்கு கீழ் இயங்காத நபர்களுக்கு கொடுக்கப்படுவதற்காக தெரிவிக்கப்பட்டு இந்த நிதிகள் சேர்க்கப்பட்டது.
மாங்குளத்தில் அமைந்துள்ள பராமரிப்பு விடுதியில் 10 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அங்கு இன்று வரை 6 பேர் மட்டுமே சிகிச்சை பெறுவருகின்றனர். இதில் ஒருவருக்கு 20 இலச்சம் ரூபா செலவு செய்வதாக காட்டப்படுகின்றது. அவ்வாறே விசேட உணவு என்னும் திட்டத்தின் கீழ் பணம் எடுக்கப்பட்டு மோசடி இடம்பெற்றுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளருக்கு 14 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அதற்கு தீர்வை பெற்றுத்தருமாறு இரண்டு கடிதங்கள் அனுப்பினோம்.
கிழக்கில் நடக்கும் பிரச்சினை
அதற்கு அவர் எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை நீங்கள் கடிதங்களை மாறி அனுப்பிவிட்டீர்கள்.

கிழக்கில் நடக்கும் பிரச்சினைக்கும், வடக்கில் நடக்கும் பிரச்சனைக்கும் எந்த தொர்பும் இல்லை என பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதே பிரதேச செயலாளர் கடந்த 8 ம்மாதம் வங்கி நடவடிக்கைக்காக 61 இலச்சம் பணத்தை பெறுவதற்கு கையொப்பம் இட்டு மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளார்.
இவைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட திணைக்கள தலைவர்கள் மற்றும் வடக்கு ஆளுநருக்கு கடிதம் அனுப்பினோம் எவருமே தீர்வு தரவில்லை இதனடிப்படையில் பொது கூட்டத்தில் அமைப்பில் பதவி வகித்தவர்கள் இவர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டனர்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |