சாரதியின் தூக்க கலக்கத்தால் வீண் விரயமான பாரிய எரிபொருள்
சாரதியின் தூக்க கலக்கம்
எரிபொருளை ஏற்றிச் சென்ற பவுசர் சாரதியின் தூக்க கலக்கம் காரணமாக 33 ஆயிரம் லீற்றர் எரிபொருள் வீண் விரயம் ஆன சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தற்போதைய எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வரும் நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
33,000 லீற்றர் எரிபொருள் வீணானது
அப்புத்தளை நகருக்கு திருக்கோணமலை ioc முனையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 33,000 லீற்றர் எரிபொருள் தாங்கிய கனரக வாகனம் (பவுசர் ) அப்புத்தளை பங்கெட்டிய முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் வீதியை விட்டு விலகி தடம்புரண்டது.
சாரதியின் தூக்க கலக்கத்திலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்விபத்து குறித்து அப்புத்தளை காவல்துறையினர் பூரண விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .
இந்த விபத்தில் எரிபொருள் முற்றாக வீண்விரயம் ஆனதுடன் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
