விவசாயிகளுக்கான பாரிய வேலைத்திட்டம்: வெற்றி பெறுமா அரசின் முயற்சி!
பயிர் சேதப்படுத்தும் விலங்குகளின் கணக்கெடுப்பை சனிக்கிழமை (மார்ச் 15) நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை விவசாய அமைச்சு எடுத்துள்ளது.
இந்த நோக்கத்திற்காக விநியோகிக்கப்பட்ட படிவத்தின்படி, விவசாயிகள் தங்கள் சொத்துக்களினல் (காணி) உள்ள விலங்குகளை எண்ண ஐந்து நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஐந்து நிமிட கணக்கெடுப்பு
அத்தோடு, விலங்கு கணக்கெடுப்பு எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை காலை 08.00 மணி முதல் காலை 08.05 மணி வரை ஐந்து நிமிடங்களில் நடத்தப்படும்.
சனிக்கிழமை விலங்கு கணக்கெடுப்பை மிகவும் துல்லியமாகவும் திறமையாகவும் நடத்த விவசாய அமைச்சு வளாகத்தில் ஒரு செயல்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறப்புக் குழு நியமனம்
இதேவேளை, குரங்குகள், ராட்சத அணில்கள் மற்றும் மயில்கள் போன்ற பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகள் குறித்த கணக்கெடுப்பை மேற்பார்வையிட ஒரு சிறப்புக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விவசாயம், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சு விலங்கு கணக்கெடுப்பு தொடர்பான ஆவணங்களை அச்சிடுவதற்கு ரூ. 2.4 மில்லியன் செலவிடப்பட்டதாக தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 5 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்