கடவுள் செய்ய சொன்னார்: சூரிய கிரகணத்தின் போது நடந்த அசம்பாவிதம்
சூரிய கிரகணத்தின் போது அமெரிக்காவின் ப்ளோரிடாவில் துப்பாக்கிச்சூடு நடத்திய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்றையதினம் (08) காரில் பயணிக்கும் போது சக காரோட்டிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, அந்த பெண் தங்கியிருந்த விடுதியில் இருந்து நேற்றைய தினம் துப்பாக்கிச்சூட்டுக்கு செல்வதாக விடுதி பணிப்பாளரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
கடவுள் செய்ய சொன்னார்
அதனை தொடர்ந்து வீதியில் பயணித்த கார்களின் மீது பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதுடன், அதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கைதான பெண், “சூரிய கிரகணத்தின்போது கடவுள் செய்ய சொன்னார், நான் செய்தேன்” என தெரிவித்துள்ளார்.
அத்தோடு, கைதான பெண்ணிடமிருந்து ஏஆர்-15 வகை ரைபிள் ஒன்றும் 9 எம்எம் கைத்துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |