யாழில் நடத்தப்பட்ட பாரிய வர்த்தக சந்தை: குவிந்து கிடந்த உள்ளூர் உற்பத்திகள்
Jaffna
Sri Lankan Peoples
Northern Province of Sri Lanka
By Dilakshan
வடக்கில் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையில் பாரிய வர்த்தக சந்தையொன்று நடத்தப்பட்டுள்ளது.
வடமாகாண தொழில்துறை திணைக்களமும் இந்திய துணைத்தூதரகமும் இணைந்து குறித்த வர்த்தக சந்தையை முன்னெடுத்துள்ளது.
இந்த வர்த்தக சந்தையானது, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் கடந்த 3ஆம், 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகள் நடைபெற்றுள்ளளது.
அதன்போது, பாரம்பரிய உணவு, நெசவு உற்பத்திகள், ஆடை உற்பத்திகள், மட்பாண்ட உற்பத்திகள், உள்ளூர் அழகுசாதன உற்பத்திகள், கைவினைப்பணிகள், பனம் சார் உற்பத்தி, மூலிகைவகை உற்பத்திகள் என 60 கூடாரங்கள் அமைக்கப்பட்டு இந்த வர்த்தக சந்தை மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, வர்த்தக சந்தை நிறைவில் கலாசார நிகழ்வுகளும் அங்கு இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பான விரிவான விடயங்கள் கீழ்வரும் காணொளியில்....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி