கடமையில் இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் : நால்வர் அதிரடி கைது
மாத்தளை, யட்டவத்த பகுதியிலுள்ள கம்முல்ல எனுமிடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த யட்டவத்த காவல் நிலையத்தைச் சேர்ந்த மூன்று காவல்துறை அதிகாரிகள் மீது இன்று (10) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் காயமடைந்த மூன்று காவல்துறை அதிகாரிகளும் யட்டவத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்களை யட்டவத்த காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முச்சக்கர வண்டிக்கும் சேதம்
கைது செய்யப்பட்டவர்களில் 27 முதல் 32 வயதுக்கு இடைப்பட்ட ஒரு பெண்ணும் மூன்று ஆண்களும் அடங்குவர் என குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் காவல்துறை அதிகாரிகள் பயணித்த முச்சக்கர வண்டிக்கும் சந்தேக நபர்கள் சேதம் விளைவித்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இம்மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ராஜபக்சக்களின் தமிழ்ப்புலிப் பெண் விளிப்பு நவிக்கு சமாதான நோபல் விருது! அவர்களின் குடும்ப பெண் சிராந்திக்கு..
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |