கிடைக்கப்பெற்ற இரகசிய அழைப்பு -காவல்துறையினரால் முற்றுகை இடப்பட்ட வீடு
Sri Lanka Police
Batticaloa
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Kalaimathy
வாழைச்சேனை காவல்துறையினரின் சுற்றிவளைப்பின் போது போதை பொருள் வியாபரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரதேசத்திற்கு உட்பட்ட அரபாத் நகரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 41 வயதுடைய போதை பொருள் வியாபாரி கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அவரிடம் இருந்து 5 கிராம் 300 மில்லி கிராம் ஹரோயின் போதை பொருளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றிவளைப்பு
வாழைச்சேனை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய அழைப்பினை தொடர்ந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.
மேலும், இந்த சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதுடன் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் மாலை திருவிழா

மரண அறிவித்தல்