முல்லைத்தீவில் உறவுகளின் நினைவுகளை சுமந்து இடம்பெற்ற இரத்ததான முகாம்(படங்கள்)
தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம்தோறும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஸ்டிக்கப்படுவது வழமை.
அந்தவகையில் இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் தயாராகி வருகிறது.
இரத்ததான முகாம்
அந்தவகையில் கார்த்திகை மாதம் 21 ம் திகதி முதல் 27 ம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஸ்டிக்கப்படுவது வழமை.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மாவீரர் வாரத்தில் பல்வேறு நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாவீரர் வாரத்தில் அஞ்சலி நிகழ்வுகள் மாவீரர் பெற்றோர் கௌரவிப்புகள் இடம் பெற்று வருவதோடு இன்றைய தினம்(26) விசேடமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை பகுதியில் அமைந்திருக்கின்ற அபிஷா தனியார் வைத்தியசாலை வளாகத்தில் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொதுச்சுடர் ஏற்றி அகவணக்கம்
வன்னிகுரோஸ் அமைப்பு மற்றும் அபிஷா தனியார் வைத்தியசாலை முல்லை கிளை ஆகிய இணைந்து உயிரிழந்த உறவுகளின் நினைவாக மாபெரும் குருதிக்கொடை முகாமை இன்று ஏற்பாடு செய்திருந்தது .

உயிரிழந்த உறவுகளுக்காக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தியதை தொடர்ந்து இரத்ததான நிகழ்வு இடப்பெற்றது ஐயனார் விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மக்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு இந்த குருதிக்கொடை முகாமில் குருதி வழங்கியிருந்தனர்.
இந்த நிகழ்வுகளில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி சிவமோகன் அவர்களும் கரைதுறைப்பற்று பிரதேச சபையினுடைய முன்னாள் உப தவிசாளர் இ.இரவீந்திரன் கரைதுறைப்பற்று பிரதேச சபையினுடைய முன்னாள் உறுப்பினர் சி.லோகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் பலரும் குருதி கொடைகளை வழங்கி வருவதோடு குருதிக்கொடையை வழங்கியவர்களுக்காக ஏற்பாட்டாளர்களால் சான்றிதழ்களும் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |












அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்