திருகோணமலையில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு
By Dharu
Courtesy: Buharys Mohamed


திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (22) இடம்பெற்றது.
இந்நிகழ்வை திருகோணமலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மேளதாளங்களுடன் விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டனர்.
இதன் பின்னர் உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி உறவுகளால் தீபச் சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்தோடு மாவீரர்களின் பெற்றோர்களுக்கும், உரித்துடடையவர்களுக்கும் மதிய போசனமும் வழங்கி வைக்கப்பட்டது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

